2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவருக்கும் மறியல்

Gavitha   / 2016 ஜூலை 09 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து, 3 பேர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர், கடந்த வியாழக்கிழமை (07) வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.

தனது மைத்துனரை கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், மூதூர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று மாதத்துக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலேயே, அவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உயிரிழந்தவர்களின் மைத்துனர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 908) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .