2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வாள்வெட்டில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா    

திருகோணமலை, மஹாமாயபுரப் பகுதியில் புதன்கிழமை (26) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச்  சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒசான் மதுசங்க (வயது 25) படுகாயமடைந்த நிலையில்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர், திருகோணமலை நகரிலிருந்து மஹாமாயபுரப் பகுதிக்கு மதுபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இவ்வாறு சந்தேக நபர் வீதியால் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை ஒசான் மதுசங்க என்பவர் செலுத்தியதாகவும் இதனால், கோபம் அடைந்த  சந்தேக நபர் தனது வீட்டிலிருந்து வாளை எடுத்துக்கொண்டு வந்து ஒசான் மதுசங்கவின் வீட்டுக்குச் சென்று அவரை வாளால் வெட்டியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்நிலையில், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .