2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

திருகோணமலையில் தபால் மூலம் வாக்களிக்க 11,446 பேர் தகுதி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 11,446 பேர் தகுதி பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் நாலக றத்நாயக தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலை நகரசபைக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு 1,101 வாக்காளர்களும் கிண்ணியா நகரசபைக்கு 496 வாக்காளர்களும் சேருவில பிரதேசசபைக்கு 948 வாக்காளர்களும் வெருகல் பிரதேசசபைக்கு 10 வாக்காளர்களும் கந்தளாய் பிரதேசசபைக்கு 3,360 வாக்காளர்களும் மொறவௌ பிரதேசசபைக்கு 578 வாக்காளர்களும் கோமரங்கடவல பிரதேசசபைக்கு 1,136 வாக்காளர்களும் பதவி சிறிபுர பிரதேசசபைக்கு 1,030 வாக்காளர்களும் திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபைக்கு 737 வாக்காளர்களும் குச்சவெளி பிரதேசசபைக்கு 105 வாக்காளர்களும் மூதூர் பிரதேசசபைக்கு 790 வாக்காளர்களும் தம்பலகாமம் பிரதேசசபைக்கு 915 வாக்காளர்களும் தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
 
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 12,056 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்காக  விண்ணப்பித்திருந்தனர.; இவர்களில் 610 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 11,446 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  உதவி தேர்தல் ஆணையாளர் நாலக றத்நாயக மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .