2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

திருமலை நகரசபைத் தலைவர் பதவியிலிருந்து கௌரி முகுந்தன் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருமலை நகரசபைத் தலைவர் சண்முகராஜா கௌரிமுகுந்தன் அப்பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். 

கௌரி முகுந்தனுக்கு கிழக்கு மாகாண  முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை நகரசபைத் தலைவரின் பொறுப்புகளை உபதலைவர் கா.செல்வராசாவிடம் 3 மாத காலத்திற்கு கையளிக்குமாறு  நகரசபைத் தலைவர் கௌரி முகுந்தனை முதலமைச்சர் சந்திரகாந்தன் பணித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு திருமலை நகரசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கௌரிமுகுந்தன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இதனால், அவரை கட்சியலிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக த.தே.கூ. அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X