Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஒன்று இன்று புதன்கிழமை காலை உப்புவெளி பிரதேசசபை அலுவலகத்தின் முன்னால் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை நகரத்தில் அதிகரித்து வரும் சுகாதார தேவைகளை நிவரத்தி செய்யும் முகமாக புதிய அலுலகம் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி.கௌ.ஞானகுணாளன் இதனை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
வைத்திய கலாநிதி அங்கு உரையாற்றுகையில்,
மக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப சுகாதார சேவைகளையும் விஸ்தரிக்க வேண்டி உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக நகரத்திற்கு வெளியே புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இப்பிரிவு இப்பிரதேசத்தின் சுகாதார விருத்தி வேலைகளை கவனிப்பதோடு சேவைகளையும் வழங்கும்.
நாட்டில் பெருகி வரும் தொற்று நோய்களை தடுப்பதில் பொது மக்களது ஒத்துழைப்பும் அவசியம். தனித்து சுகாதார துறையினரால் மட்டும் இவற்றை கட்டுப்படுத்த முடியாது.என்று கூறினார்.
12 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
41 minute ago