Super User / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தீர்மானித்துள்ளதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் வேலையற்ற 30 இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை முதலமைச்சர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சரின் நிதியுதவியால் சாரதி பயிற்சியினை நிறைவு செய்த 30 இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கி வைத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், சாரதி பயிற்சினை பெற்று வெளியேறுபவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறிகளை முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் வி.கௌரிதரன் நெறிப்படுத்தி வருவதாக முதலமைச்சரின் ஊடக செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்தார்.
.jpg)
.jpg)
12 minute ago
13 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
24 minute ago