2025 ஒக்டோபர் 24, வெள்ளிக்கிழமை

வெருகலம்பதி முருகன் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ், அனுருத்தன், ஜௌபர்கான்)

கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெருகல் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது 18 நாட்கள் மிகவும் வெகு விமரிசையாக இடம்பெற்று இறுதி நாள் தீமிதித்தலுடன் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். இந்நிலையில் எதிர்வருகின்ற 27ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

கொடியேற்ற நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் வருகை தந்திருந்தார். இந்த வருடாந்த உற்சவத்தில் உலகமெல்லாம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X