2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

பெண்களிடம் நகை பறிப்பவர்கள் குறித்து எச்சரிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

கிண்ணியா பிரதேச வீதிகளில் செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களை பறித்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிச் செல்லும் கொள்ளையர்கள் இருவர் நடமாடிக் கொண்டிருப்பதாக கிண்ணியா பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாகது குறித்து கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இது தொடர்பாக கிண்ணியா பிரதேச பள்ளிவாசல்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொள்ளையர்கள் சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்திலான மோட்டார் சைக்கிளில் வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .