2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் மாணவர் விடுதி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் 20 மில்லியன் ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்ட மாணவர் விடுதி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனை திறந்து வைக்க உள்ளார்.

இக்கல்லூரியில் விடுதி வசதி இல்லாத காரணத்தால் இங்கு பயிலும் வெளியிடத்து மாணவர்கள் தனியார் வீடுகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இருந்து தமது கற்றலை தொடர்ந்து வந்துள்ளனர்.

இக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக  மத்திய கல்வி அமைச்சின் இசுறு திட்டத்தின் மூலம் இவ்விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50 மாணவர்கள் தங்கி இருந்து கற்கக் கூடியதாக வசதிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--