Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை வலயக் கல்வி திணைக்களமும் மீரிகம வலயக் கல்வி திணைக்களமும் இணைந்து இரு நகர பாடசாலைகள் வேலைத்திட்டத்தை அமுல் படுத்தினர். திருகோணமலையில் இருந்து 10 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களும்,10 ஆசிரியர்களும். மீரிகம கல்வி வலயத்தில் இருந்த 10 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் இதில் உள்வாங்கப்படடனர்.
திருகோணமலை நிலாவெளி தமிழ் மகா வித்ப்யாலயத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வையும். உறவுப் பரிமாற்றத்தையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மீரிகமவில் இருந்து வெள்ளிக்கிழமை திருகோணமலை வந்த இம்மாணவர்கள் பல்வேறு பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டு குறித்த பாடசாலை மாணவர்களுடன் உறவுப்பரிமாற்றங்களில் ஈடுபட்டனர். நிலாவெளி தமிழ் மகாவித்தியாலய காலைக்கூட்டத்தில் மீரிகம் மாணவர்கள் பங்கு கொள்வதை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago