2020 நவம்பர் 28, சனிக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியாளர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியாளர்களுக்கான பயிற்சிச் செயலமர்வொன்று எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

திருகோணமலையிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சு நடத்துகின்ற இப்பயிற்சிச் செயலமர்வு, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியாளர்களுக்கானது ஆகும். 

நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை மிகவும் பயன்மிக்கதாக மேற்கொள்ளும் நோக்குடன் ஒத்துழைப்புகளை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், தட்டெழுத்தாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வாக இது அமையுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு கணினிப் பயிற்சியின் அடிப்படை அம்சங்கள், இணையத்தளம், மின்னஞ்சல், மனித உரிமை, அரசியல் யாப்பு, நாடாளுமன்றச் சட்டங்கள், ஒழுக்கக்கோவைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகள், நாடாளுமன்றக் கேள்வி, அலுவலக முறைமை, பொதுமக்கள் தொடர்பாடல், நாடாளுமன்ற விவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு முகாமைத்துவம் என்பன சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--