2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

அன்பு கலைக்கழகத்தின் பௌர்ணமி கலைவிழா

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகேணமலை அன்புவழிபுரம் அன்பு கலைக்கழகம்  பௌர்ணமி கலைவிழாவினை 5 ஆவது தடவையாக இன்று நடத்தியது.

கலைமகள் வித்தியாலயத்தில் அன்பு கலைக்கழகத்தின் தலைவி  திருமதி சறோசா இராமநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில்  இவ் வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி பெற்ற அன்புவழிபுரத்தை சேர்ந்த 10 மாணவர்கள் இங்கு பாராட்டப்பட்டனர்.

அத்துடன் 2009 ஆம் வருடம் உயர்தரம் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த 10 மாணவர்களும், இவ்வருடம் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்து  பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவதற்கு தகுதிபெற்ற 4 மாணவர்களும் பாராட்டப்பட்டனர்.

கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் க.ரவிதாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .