2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு: தாய் கைது

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் சலாம் யாசீன்)

திருகோணமலை மொரெவவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ  முஸ்லிம் மையவாடியிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு சிசுவின் சடலமொன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மொரெவவ பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த சிசுவின் தாயை கைது செய்து மேலதிக சிகிச்சைகளுக்காக பொலிஸ் பாதுகாப்புடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிசுவின் பிரேத பரிசோதனை திருகோணமலை நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரெவவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

 • T.sawaheer Monday, 10 January 2011 04:33 PM

  இப்படியான விடையக்களுக்கு வறுமையும்.பாலியலை தூண்டும் காட்சிகளும் காரணமாகும்.

  Reply : 0       0

  a.s.m.yaseem Wednesday, 12 January 2011 06:43 AM

  பழக்க வழக்கம் சரி இல்லை.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X