2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

நிலாவெளி கடற்கரையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
 
பாதகம, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த ஹெத்தம்பியலாகே சிசிறகுமார (வயது 19) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
 
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரியிலிருந்து  சுற்றுலாப்பயணம் வந்து அன்றையதினம் மாலை நிலாவெளி கடற்கரையில் குழித்து விளையாடிக்கொண்டிருந்தபோது, குறித்த நபரை அலை அடித்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் கரையொதுங்கிய சடலம் குச்சவெளி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
 
சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--