2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

'ரோட்டரி மதுர குயில்' தெரிவு

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ரோட்டறி கழகம் - இளையவர்களின் பாடல் திறமையை வளர்த்து அவர்களை வெளி உலகுக்கு அறிமகம் செய்து வைக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளது. இதற்காக 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை பாடவைத்து அவர்களில் இருந்து சிறந்த குரல் வளமும் திறமையும் உள்ள 25 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் இசையில் கைதேர்ந்த நிபுனர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளது.

இத்தெரிவுக்காக 150 இளைஞர், யுவதிகள் போட்டி ஒன்றின் மூலமாக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் இருந்து முன்னாள் தலைவர் இராஜாராம்மோகன்,  வித்துவாட்டி விஜயகுமார், தவசிலிங்கம் அடங்கலான தேர்வுக்குழு 25 பேர்களை தெரிவுசெய்துள்ளது. இறுதி நிலை போட்டி ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டு சிறந்த 'ரோட்டரி மதுர குயில்' தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--