2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

திருமலையில் சமாதான பேரவையின் இருநாள் செயலமர்வு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
திருகோணமலை மாவட்டத்தில் சர்வமத சமய சமூகத் தலைவர்களினது கடமைகளும் பொறுப்புக்களும் பற்றிய இருநாள் செயலமர்வு எதிர்வரும் 25ஆம் 26ஆம் திகதிகளில் திருமலை சர்வோதய மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக சமாதானப் பேரவையின் இணைப்பாளர் றபாய்தீன் பாபு தெரிவித்துள்ளார்.
 
மக்களை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் இட்டுச்செல்வதில் மதத்தலைவர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். இதனைக் கருத்திற்கொண்டு சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் இடையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்பும் நோக்குடன் மதத்தலைவர்கள் மற்றும் சமூக சமயத் தலைவர்கள் என்ற குழுவாக ஒன்றிணைந்து செயற்பட உடன்பட்டிருக்கின்றார்கள்.
 
இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மனிதநேயத் தேவைகளை இணங்காண்பதற்கான போதிய அறிவையும், அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் இரண்டு நாள் செயலமர்வை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--