2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

திருமலை விவசாயிகளின் தொழில்சார் விருத்திக்கு உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளின் தொழில்சார் திறனை அபிவிருத்தி செய்யும் வகையில் விவசாயத் திணைக்களத்தால் தொழில் நுட்பக்கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்புவளிபுரத்தில் உள்ள விவசாய பயிற்சி நிலையத்தில் வைத்து இவ்வுபகரணயங்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை வழஙகி வைக்கப்பட்டது.

மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர்.பூ.உகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு முதல் கட்டமாக உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.  விதைகருவிகள், அரிசியில் கல் நீக்கும் இயந்திரம், தெளிகருவிகள், நீர் இறைக்கும் இயந்திரம் என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டதன.  

ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின்  அதிகாக்ரி சமரக்கோன், கிழக்குமாகாண விவசாய கால்நடை, மற்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கிழக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர் குசைன், ஐநாவுக்கான கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின்  உயர் அதிகாக்ரி நாமல் சமரக்கோன், மாவட்ட  அதிகாக்ரி ஜி.ஞானகணேசன்  கமநல கேந்திரநிலய உதவி மாவட்ட ஆணையாளர் எஸ்.புனிதகுமார் மற்றும் விவசாய விரிவாக அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--