Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 09 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத கருக் களைப்பு நிலையங்களை அடையாளம் கண்டு முற்றுகையிட விசேட குழுவொன்றை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் சுகாதாரத்துறை முன்னேற்றம், 2012ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆராயும் சுகாதார உயாமட்ட அதிகாரிகளின் கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திலே அமைச்சின் செயலாளர் எல்.எம்.அஸீஸ், உதவிச் செயலாளர் ஏ.உமைதீன், மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி கலந்துரையாடலின் போது பதிவு செய்யப்படாத மற்றும் போலியான மருந்து விற்பனை நிலையங்கள் அடையாளம் காண்பதற்கும் விசேட குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2012 இன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாணத்தில் வைத்திய சாலைகளிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் அபவிருத்தி செய்வதென்றும் வைத்தியசாலைகளில் நிலவும் தளபாட பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதுடன் தேவையான வைத்திய உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
40 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago
53 minute ago