2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தக பைகள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 12 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கு புத்தக  பைகள் வழங்கும் வைபவம் இன்று  ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், பிரதி அமைச்சர் சுசுந்த புஞ்சிநிலமே, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரால் தெரிவு செய்யப்பட்ட 1000  பாடசாலை மாணவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவிர பாடசாலை பைகளை வழங்கி வைத்தார்.

அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதியும் கலந்து கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X