Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட், எஸ்.எஸ்.குமார்))
தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியிலுள்ள கோவிலுக்கு முன்னால் தம்பலகாமம் பிரதேச மக்கள் இன்று செவ்வாய்கிழமை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கிரவல் இட்டு செப்பணிடப்பட்ட தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதி தற்போதைய காலநிலை காரணமாக கடும் காற்று வீசுவதனால் இக்கிரவலிருந்து வீசப்படுகின்ற தூசி அங்குள்ள வீடுகளுக்கும் மற்றும்
உணவுச்சாலைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதனை கண்டித்தே பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தம்பலகாமம் கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு தொழில் நிமித்தம் சென்ற உத்தியோகத்தர்கள் 3 மணி நேரம் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.
37 minute ago
47 minute ago
23 Oct 2025
hilmy Wednesday, 15 June 2011 05:42 AM
கிண்ணியயா மக்கள் எப்போதோ செய்யவேண்டியதை இவர்கள் செய்திருக்கிறார்கள். நன்றி ,இனியாவது கிரவல் கற்களிருந்து இவ்வீதி விடுதலை அடையுமா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
47 minute ago
23 Oct 2025