2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தமிழரசு கட்சி வேட்பாளர்களுடன் சம்பந்தன் சந்திப்பு

A.P.Mathan   / 2011 ஜூன் 17 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.குருநாதன்)

திருகோணமலை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஜூலை 23ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில் - குச்சவெளி, சேருவில மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.

இப்பிரதேசங்களில் போட்டியிடும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறவிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X