2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கோபாலபுரம் கிணற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார், அமதொரு அமரஜீவ)

திருகோணமலை வடக்கு,  கோபாலபுரம் பகுதி கிணறொன்றில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரதேசவாசிகளால் குச்சவெளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இவ்விரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கோபாலபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் கேதீஸ் (வயது 25) மற்றும் எஸ்.சஞ்சித்குமார் (வயது 14) ஆகிய இருவரது சடலங்களே மேற்படி கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் குறித்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்களா? இல்லை இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டார்களா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இரண்டும் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைகளை அடுத்து அவற்றை பெற்றோரிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .