Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 20 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ, எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய இடமாற்றங்களை நிறுத்துவது தொடர்பில் ஆசிரியர் சங்கங்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதனால் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் எதிர்வரும் 23ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை பூரணமாக அலட்சியம் செய்யும் வகையிலும் வருடத்தின் நடுப்பகுதியில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பாடசாலைகளின் இயல்பான தொழிற்பாடுகளும் மாணவர்களின் கல்வியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டி குறித்த இடமாற்றங்களை நிறுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆகிய நான்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இதனாலேயே மேற்படி சுகயீன விடுமுறைப் போராட்டத்தினை நடத்த மேற்படி ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.
19 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago
bis Monday, 20 June 2011 11:33 PM
2/3 இன் தலைக்கனம். எங்கும் எதிலும் முயலுக்கு மூமுணுகால் பிடிவாதம். ....
Reply : 0 0
vaasahan Tuesday, 21 June 2011 05:26 PM
தலைக்கனம் அர்த்தப்படுத்தப்படுவதும் நமது தலைமுறையின் சோகம்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago