2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

"ஆசிரியர் சமமின்மையை போக்கவே கிழக்கில் கொள்கை ரீதியான இடமாற்றம்"

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் சமமின்மை நிலையை போக்கும் முகமாகவே இம்மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் என்ற கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டி ஏற்பட்டதாக மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் சில கல்வி வலயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் அதேவேளை, மேலும் சில கல்வி வலயங்களில் மேலதிகமான ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள ஆசிரியர் சமமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில், 'கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமமின்மை பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை மேற்கொள்வதற்காக இடமாற்றக் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டது.

இருப்பினும் குறித்த குழுவினால் இந்த இடமாற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. அதனால் நிர்வாக ரீதியான இடமாற்ற நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான தேவை ஏற்பட்டது.

அத்துடன், கிழக்கு மாகாண ஆசிரியர்களில் சிலர் காலநேர அட்டவணையின்றி வேலைசெய்யாதிருந்து சம்பளம் பெற்று வருகின்றனர். இதனால் அரசாங்கத்தின் நிதி வீனடிக்கப்படுகிறது. இந்த ஆசிரியர் சமப்படுத்தல் நடவடிக்கையின் மூலம் அரச நிதி வீனடிக்கப்படாது உரிய முறையில் பயன்படுத்தப்படும். இக்காரணங்களைக் கருத்திற் கொண்டே மேற்படி ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0

  • vaasahan Tuesday, 21 June 2011 07:53 PM

    இடமாற்ற சபை இயங்காத மர்மம் என்ன? வான்கதவு திறக்கும் வியூகம் யாரின் புத்தியில் இருந்து? மேலதிகமாக ஆசிரியர் காணப்பட்ட அவ்வப்போது நடவடிக்கை எடுத்தல் வான்கதவு திறக்கும் ராஜதந்திரத்துக்காகப் பின்போடப்பட்டதா? நேரசூசி வழங்காத அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாரிடம் கடன் கொடுக்கப்பட்டது? வான்கதவு திறப்பதுபோல் செய்தால் வரும் கொந்தளிப்பை உணரமுடியாதா? தொ.சங்கத்தை கொஞ்சம் மதித்தால் யாருக்கு தலைகுனிவு? நீங்கள் கடற்படையில் இருந்து வந்தவர் ஆனால் அதிகாரிமார் புலிப் படையில் இருந்து வரவில்லையே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X