2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா,மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக எம்.எஸ்.தௌபீக் நியமனம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இப்பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் சகல அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளைச் செய்வதற்கு இதன்மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மஹிந்த சிந்தனை வேலைத் தொலை நோக்கு திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தலின் வேலைத்திட்ட பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .