2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

க.பொ.சா/த மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான கருத்தரங்கு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கின் கீழ் கிண்ணியா பிரதேச மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

தொடர்நது ஐந்து சனிக்கிழமைகள் தெரிவு செய்யப்பட்ட ஏழு நிலையங்களில் இக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முதற் தடவையாக தோற்றவுள்ள 25 பாடசாலைகளைச் சேர்ந்த 1400 மாணவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழ் மொழி, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் வரலாறு ஆகிய ஐந்து பாடங்களில் இக் கருத்தரங்கை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வினாத்தாள்கள் அடங்கிய கையேடுகளை கல்வி அமைச்சு தயாரித்து வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X