2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா பிரதேசத்தில் மீண்டும் மினி சூறாவளி

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் மினி சூறாவளி தாக்கமொன்று இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
 
இந்த மினி சூறாவளியினால்  கிண்ணியா பிரதேசத்திற்குட்பட்ட சூரங்கல், கச்சக் கொடித்தீவு மற்றும் காக்காமுனை ஆகிய
பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மினிச் சூறாவளி ஏற்பட்டுள்ளது. இதனால் 42 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X