2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

திருமலை புதிய மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி திறந்து வைப்பார்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டச் செயலகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இம்மாதம் 18ஆம் திகதி திறந்து வைக்கவிருப்பதாக உத்தியோகபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ளார்.

 

முன்னர் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி புதிய மாவட்டச் செயலகம் திறந்து
வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது. புதிய மாவட்ட செயலகக்கட்டடம் திருகோணமலை - கண்டி வீதியில் திருகோணமலை நகரிலிருந்து நான்கு மைல் தொலைவில் 4ஆம் கட்டை என்னும்
தற்போதைய மாவட்டச் செயலகம், பிரட்ரிக் கோட்டைக்குள் பிரித்தானியர் காலத்து
கட்டடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • mohan Saturday, 15 October 2011 04:34 PM

  இரண்டவது பந்தி 4கட்டை தெளிவில்லை.

  Reply : 0       0

  koneswaransaro Saturday, 15 October 2011 06:29 PM

  "நான்காம் கட்டை எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது." என வசனம் அமைந்தால் செய்தி தெளிவாக இருந்திருக்கும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--