2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சின்னக்குளம் கிராமத்தில் புதிய முன்பள்ளி திறப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 14 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
மூதூர் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சின்னக்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய முன்பள்ளிக் கட்டிடத் திறப்பு விழா இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் நெதர்லாந்தின் நிதிவழங்கும் ஏசிஎன்எஸ் அமைப்பின் அணுசரணையுடன் மேற்படி கட்டிடம் அமைக்கபடப்டது.

இந்நிகழ்வில், எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் ஜி.ஏ பிரான்சிஸ், கல்விப்பிரிவின் இணைப்பாளர் க.சூரியகுமாரி , தொழில்நுட்ப உத்தியோகத்தர் திசாந், யூட் ஆகியோருடன் சின்னக்குளம்
பாடசாலையின் அதிபர், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், ஆரம்பத்தில் வழங்கப்படுகின்ற  கல்வியானது அவர்களின் எதிர்காலத்தை தீர்மாணிக்கவும் அவர்களினால் சிறந்ததொரு சமூதாயத்தை உருவாக்க உதவுகின்றது. ஆகவே  பெற்றோர்கள் முன்பள்ளிக் கல்வியில் அதிக அக்கறைகாட்ட வேண்டுமென தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X