2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஜெய்கா திட்டத்தின் கீழ் வீதி நிர்மாண வேலைகள்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி,கஜன்)

திருகோணமலை மாவட்டத்தில் 29.5 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வீதிகளின் நிர்மாண வேலைகளை  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று புதன்கிழமை  ஆரம்பித்து வைத்தார்.

ஜெய்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வீதி நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  
பதவிஸ்ரீபுர வீதி 15.5 மில்லியன் ரூபா செலவிலும் நிலாவெளி பிரதேசத்தில் அல்பதான் வீதி 14.4  மில்லியன் ரூபா செலவிலும்  புதிய கொங்கிறீட் வீதிகளாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

புத்தசாசன பிரதியமைச்சர் எம்.எஸ்.ரீ.கே.குணவர்த்தன, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அன்வா, நிமல் காமினி ஹேவாவிதாரண உள்ளிட்டோர் இதற்கான வைபவத்தில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .