2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

மொழிகள் மற்றும் பயிற்சிகளுக்கான மாவட்ட அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 20 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மொழிகள் மற்றும் பயிற்சிகளுக்கான (ஐ.டீ.பீ.எஸ்.) மாவட்ட அலுவலகம் நேற்று  சனிக்கிழமை கிண்ணியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளரும், மூதூர் தொகுதி அமைப்பாளருமான கே.ஜே.கே.ஜெகுபார் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், மொழிகள் மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவாகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாந் எச்.ஹேரத், ஐ.டீ.பீ.எஸ். நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எல்.நியாஸ், மூதூர் மொழி சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.ஹூசைன், தோப்பூர் மொழி சங்கத்தின் தலைவர் எம்.முபாறக், கிண்ணியா மொழி சங்கத்தின் செயலாளர் ஏ.டபிள்யூ.ஆசீக்,  கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம், அகில இந்திய  முகாமைத்துவ  கற்கை நிலைய திருமலை இணைப்பாளர் எம்.எம்.பாசித், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • sarabdeen imtiyas Monday, 21 November 2011 06:52 PM

    எங்கள் ஊரில் இவ்வாறன ஒரு செயற்பாடு இதுவரை காலமும் நடை பெறவில்லை. இது புதுமையானது, புதியது. எனவே இதனை தொடர்ந்து சிறப்புடன் செயற்படுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .