Menaka Mookandi / 2011 நவம்பர் 24 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட், முறாசில்)
மூதூர் கணேசபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குருகுலசிங்கம் வதனி (வயது 33) என்ற ஆசிரியையே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
கணேசபுரத்திலுள்ள தனது இல்லத்திலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு புறப்பட்டு பாடசாலை செல்லும் வழியில் மைதிமடைக்குளம் எனும் பகுதியில் வைத்து இவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இவ்வாசிரியையை வழிமறித்து வயிற்றிலும், முகத்திலும் கூறிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த பெறுமதியான தங்க ஆபரணங்களும் ஆயுததாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago