2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சமூக வலுவூட்டலுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானப் பணி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


சமயங்களுக்கிடையிலான ஒற்றுமை, சமுதாய அபிவிருத்தி என்பவற்றின் ஊடாக சமூக வலுவூட்டலுக்கான வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட சர்வமத அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சிரமதானப்பணி  கிண்ணியா ஈச்சந்தீவு கண்ணகி அம்மாள் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்களுடன் மூவின மக்களும் இணைந்துகொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்ட சர்வமத அமைப்பின் தலைவர் மௌலவி எம்.வை.ஹதியத்துல்லாக்வின் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் திருகோணமலை ஆண்டான்குளம் ஸ்ரீவஜிராம விகாராதிபதி சோமரெட்ண தேரர், ஈச்சந்தீவு கண்ணகி அம்மாள் ஆலய குருக்கள் யோகராசா, உப்பாறு இராணுவ பொறுப்பதிகாரி வெல்கம்வெல ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .