2021 ஜனவரி 23, சனிக்கிழமை

திருகோணமலையிலும் அமெரிக்க கோனர்

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் திருகோணமலையில் அமெரிக்க கோனர் திறக்கப்படவுள்ளது என தூதுவராலய தகவல்கள் தெரிவித்தன.

2013ஆம் ஆண்டின் முற் பகுதியில் திருகோணமலை நகரிலேயே இந்த புதிய அமெரிக்க கோனர் திறக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கொழும்பில் அமெரிக்க சென்டரும் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் அமெரிக்க கோனரும் அமெரிக்க தூதரகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

இந்த அமெரிக்க கோனரின் ஊடாக அமெரிக்க வெளியீடுகள், புத்தங்கள், இணையத்தள சேவை மற்றும் விசேட விரிவுரைகள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .