2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவு

Super User   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாண சபையின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும் உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை கடந்த வாரம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மாகண சபை உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தார்.

இந்த யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இதற்கமைய மாகாண சபையின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவும் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களுக்கு 7,000 ரூபாவும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கு 9,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை 5 தினங்கள் தொடர்ந்து நடத்துவது என்றும் கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .