2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

திருமலை எல்லை நிர்ணயக்குழுவில் தமிழர் உள்வாங்கப்படாமை முறைகேடாகும்: துரைரெட்ணம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

திருகோணமலை மாவட்டத்தின் எல்லை நிர்ணயக்குழுவில் தமிழர் ஒருவர் கூட உள்வாங்கப்படாமை கிழக்கு மாகாண சபையின் பக்கச்சார்பான முறைகேடான செயற்பாடாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இன்று திருமலையில் கூடிய முதலாவது எல்லை நிர்ணயக்குழு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

'தமிழ் சிங்கள முஸ்லிம் என 3 இ மக்களும் வாழும் மாவட்டம் திருகோணமலை மாவட்டமாகும். எல்லை நிர்ணயக் குழுவில் தமிழரைக் கட்டாயமாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை.

ஆனால் நிமிக்கப்பட்ட 6 பேரில், மாவட்ட அரசாங்க அதிபர், தேர்தல் ஆணையாளர், நில அளவைகள் அதிகாரி, மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மாகாண அமைச்சர் ஆகியோர் சிங்களவர்களாகவும், புள்ளிவிபரத் திணைக்களம், மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து நியமிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றனர்.

உள்ளூராட்சி திணைக்களத்தின் சுற்று நிருபர்தின் படி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும். திருகோணமலையில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தமிழராக இருக்கின்றார். இந்த நிலையில் இது தவிர்க்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர் ஒருவர் இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை பிரதேச செயலாளராக இருக்கின்ற முஸ்லிம் ஒருவரை முறைகேடாக நியமித்திருக்கிறது.

எனவே ஒரு பக்கச் சார்பான செயற்பாடாக அமையாத வண்ணம் தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன ரீதியான வேறுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஆவன செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--