2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வாசிப்பு மாதத்தையொட்டி விசேட நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


ரொட்டறி கழகம் திருகோணமலை வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மூன்றாவது மைல் கல்லில் அமைந்துள்ள கிறேஸ் வயோதிபர் சிறுவர் விடுதியில் விசேட நிகழவொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தி இருந்தது.

வாசிப்பு மாதத்தையொட்டி தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவிகள் இருவர் சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிகப்பட்டனர்.

சுமேதங்கர வித்தியாலயத்தைச்  சேர்ந்த சந்தாமினி  நிர்மளா, ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியைச் சேர்ந்த துவாரகா வரதரஜா ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வினை நினைவு கூரும்முகமாக  உப்பாறு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் பன்குளம் ஒளவைநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இதேவேளை, கிறேஸ் இல்லத்தைச் சேரந்த  71 பேருக்கு நுளம்பு வலைகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.அருளானந்தம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  வாசிப்பு முக்கியத்துவம் பற்றியும், எழுதுவதிலும். வாசிப்பதிலும் உள்ள சுவாரசியத் தன்மை பற்றி  சிறப்புரை ஆற்றினார்.

ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.அருளானந்தம் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  வாசிப்பு முக்கியத்துவம் பற்றியும், எழுதுவதிலும். வாசிப்பதிலும் உள்ள சுவாரசியத் தன்மை பற்றி சிறப்புரை ஆற்றினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--