2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புல்மோட்டைப் பிரதேசத்தில் காணிகள் அளவை நிறுத்த தீர்மானம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

புல்மோட்டைப் பிரதேசத்தில் காணிகள் அளவை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என புல்மோட்டைப் பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கென நடாத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.

புல்மோட்டைப் பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் படையினரால்  அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி அபகரிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கூட்டம் ஒன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நேற்று (01) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு எவரும் எவ்வித இடையூறும் விளைவிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் காணிகள் அளவை செய்யப்படுவதனையும் உடனடியாக நிறுத்துவதென்றும்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதேர்டு இது தொடர்பாக உரிய திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் முதலமைச்சரால் அறிவித்தல் கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி, காணி அபிவிருத்தி அமைச்சர் விமலவீர திஸநாயக்க,வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,தவிசாளர் ஆரியபதி கலபதி,பாரளாமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,மாகாண சபை உறுப்பினர்களான ஆர்எம்.அன்வர்,பிரியந்த பத்திரண,மாகாண காணி ஆணையாளர்,புவிச்சரிதவியலர் திணைக்கள உதவியாளர்,வன வள திணைக்கள உத்தியோகத்தர்,மற்றும் குச்சவெளிப் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பாக கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற மாகாண சபை அமர்வின்போது  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் முன்வைத்த கவனயீர்ப்பு பிரேரனைக்கு  இனங்க,முதலமைச்சர் தலைமையிலான இந்த விஷேட கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--