2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

அமைச்சர் சுசந்த தலைமையில் வெருகல் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வெருகல் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தலைமையில் இன்று திங்கள் காலை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தித் திட்ட உத்தியோகஸ்தர்கள், மற்றும் அரச, அரச சார்பற்ற கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் என பலர் இந்த பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

பிரதேசத்தில் இதுவரை இடம்பெற்றிருக்கின்ற அபிவிருத்திகளின் முன்னேற்றம் மற்றும் முன்னுரிமை அளித்துத் துரிதப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--