2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மழை வேண்டி பிரார்த்தனை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில்  முள்ளிப் பொத்தானை பிரதேச பொது மக்களால் மழை வேண்டி தொழுகையும் தூஆ பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.

பிரதேச மத சமூக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வு 95 மைல் கல் தி-புஹாரி வித்தியாலயம்,  96 வது மைல் கல் முள்ளிப் பொத்தானை  அல் - ஹிஜ்ரா வித்தியாலயம் மற்றும் 97 தி-சிறாஜ் நகர்  வித்தியாலயங்களின் மைதானங்களில் நடைபெற்றன.

இப் பிராத்தனை நிகழ்வில் பொது மக்கள்  மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட  சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .