2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

விளையாட்டுக்கழக பொருட்கள் தீயிட்டு சேதம்

Super User   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை சாட்டோ விளையாட்டுக்கழகத்திற்கு சொந்தமான விளையாட்டு பொருட்கள் இனந்தெரியாதோரால் சனிக்கிழமை (5) அதிகாலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சாட்டோ வெற்றிக் கிண்ண டுவன்டிடுவன்டி கிரிக்கட் சுற்றுப் போட்டியினை பிரதேச கழகங்களுக்கிடையில் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இவ்வாறு கழக விளையாட்டு பொருட்களுக்கு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

கிரிக்கட் விளையாடுவதற்குப் பயன்படுத்தப்படும் மெடின், வலைபந்துக்குறிய வலை என்பன எரிக்கப்பட்டுள்ளதுடன் மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .