2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Super User   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்கேணி விநாயகர் ஆலயத்தில் நவக் கிரக சிற்பங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்று புதன்கிழமை (9) இடம்பெற்றது.

இவ்நவக்கிரக சிற்பங்களை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியை ஆலங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட நலன் விரும்பியொருவர் நன்கொடையாக வழங்கியிருந்தார்.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் ரீ.கௌரிராசா தலைமையின் இடம்பெற்ற இந்நிகழ்வில், கலந்துகொண்ட கிண்ணியா பிரதேச செயலாளர் கிருஷ்னேந்திரன் இதற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே.கோணஸ்வரன், சமாதான நீதிவான் கே.ரவிச்சந்திரன், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--