2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உலக வங்கி பிரதிநிதிகள் குழு கிண்ணியா விஜயம்

Super User   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்,ஏ.எம்.ஏ.பரீத்


புறநெகும திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வு சம்மந்தமாக பார்வையிட்டு அறிக்கை தயாரிப்பதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் குழு வியாழக்கிழமை (10) கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்டது.

புறநெகும திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டையாறு பூங்கா, சின்னக் கிண்ணியா மரக்கறி சந்தை, துறையடியில் அமைக்கப்பட்டு வரும் விருந்தினர் விடுதி, றஹ்மானியா சிறுவர் பூங்கா,மற்றும் தோனா பொதுப் பூங்கா ஆகிய அவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதோடு இவற்றை மிக விரைவாக நிறைவு செய்ய வேண்டிய தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு குழுவினர் புறநெகும திட்டங்களின் குறை நிறைகள் தொடர்பான கருத்துக்களை பொது மக்களிடமும் கேட்டறிந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை உதவியாளர் எம்.எம்.ஹில்மி, திருமலை மாவட்ட  உள்ளுராட்சி ஆணையாளர்,உதவி உள்ளுராட்சி ஆணையாளர்,உட்பட புற நெகும உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--