2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு பரீட்சை நிலைய அனுமதி

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.அப்துல் பரீத்

குச்சவெளி பிரதேச உதவித் தவிசாளர் ஆதம்பாவா தௌபீகின்  வேண்டு கோளின் பெயரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் நடவடிக்கையினால் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு புதிதாக க.பொ.த. உயர்தர பரீட்சை நிலைய அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனால் இப்பிரதேசத்திலுள்ள சுமார் 200 மேற்பட்ட பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் பயன் பெறுவர்.

இந்த அரிய பெரும் சேவையினை பெற்றுத்தந்த முதலமைச்சருக்கும் குச்சவெளி பிரதேச சபை உதவித்தவிசாளருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு இப்பாடசாலையினை 1000 பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளவாங்குவதற்கு தேவையான நடவடிக்கையினையும் முன்பு  எடுத்தமைக்கும் இப்பிரதேச கல்விச்சமூகமும் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .