2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

புதிய பாடசாலை அங்குரார்ப்பணம்

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோணேசபுரி கிராமத்தில், கோணேசபுரி தமிழ் வித்தியாலயம் என்னும் புதிய பாடசாலை ஆரம்பித்து வியாழக்கிழமை (29) வைக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் முன்னிலையில், கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தொடக்கி வைத்தார்.

பாடசாலைக்கான பெயர் பலகையை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் ஆனந்த நடேசன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

பாடசாலை கட்டடத்தை கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்  சி.தண்டாயுதபாணி, நாடா வெட்டி திறந்து வைத்தார்.
தரம் ஒன்றுக்கு  16 மாணவர்கள் சேர்த்துக்ககொள்ளப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X