2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுகிர்தராஜன், லசந்த ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு

Thipaan   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,வடமலை ராஜ்குமார்

மறைந்த ஊடகவியலாளர்களான சுகிர்தராஜன், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை (31) அனுஸ்டிக்கப்பட்டது.

மலைமுரசு பத்திரிகை, திருகோணமலை ஊடகவியலாளர்கள்,  முத்தமிழ் மன்றம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு தரப்பிலும் இருந்து பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். விசேட உரையினை மூத்த ஊடகவியலாளரும் உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரன் நிகழ்த்தினார்.

சுகிர்தராஜன், 24.01.2006ஆம் ஆண்டு காலை உச்சபாதுகாப்பு பிரதேசமான  வடக்கு, கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

லசந்த விக்கிரமசிங்க கொழும்பில் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .