2021 மே 10, திங்கட்கிழமை

மாணவர்களுக்கான பஸ் சேவை ஆரம்பம்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கான சிசு சரிய பஸ் போக்குவரத்துச் சேவையொன்று வியாழக்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் நலன் கருதியே இந்த சிசு சரிய பஸ் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உள்நாட்டுப் போக்குவரத்துப் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அமைச்சரின் இணைப்பாளர் கே.எம்.நிஹார் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X