Freelancer / 2025 நவம்பர் 21 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இருவர் உட்பட 8 பேர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இந்தக் கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 8 பேரில் இருவர் நீண்டகாலமாக ஐஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாடகைக்கு அறைகளையும் பெற்று தங்கியிருந்துள்ளனர் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரிடம் இருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய 6 பேரிடம் இருந்தும் சிறிதளவு ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (a)
53 minute ago
55 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago
20 Nov 2025