2021 மே 10, திங்கட்கிழமை

சமகாலத்தில் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்

Sudharshini   / 2015 பெப்ரவரி 12 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சமகாலத்தில் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் புதன்கிழமை (11) திருகோணமலை உப்புவெளி பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இச்சந்திப்பில்  மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் ஜே.வி.பி. முக்கியஸ்தர் விஜேயகோன் சுமல ஆகியோர் திருகோணமலை மாவட்ட பொதுமக்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தனர்.


இதன்போது, கடத்தப்பட்டு காணாமல்போன அல்லது யுத்தத்தின் போது கொல்லப்பட்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் தமது கல்வியைத் தொடருவதில் எதிர்நோக்கும் கஷ்ட நிலைமை, பாதுகாப்புத்தரப்பினர் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகள், வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் இருப்பிட வசதி பிரச்சினை, நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் ஒன்று திருகோணமலையில் ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இக்கலந்துரையாடலில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளை  முன்வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X