2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அருண சிறிசேனவின் ஆதரவாளர்கள் பயணித்த வான் வீதியை விட்டு விலகிச்சென்று பள்ளத்தில் விழுந்ததினால், காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆதரவாளர்கள் பதவிசிறிபுரவில் தேர்தல் பிரசார நடவடிக்கையை முடித்துவிட்டு  வியாழக்கிழமை அதிகாலை இந்த வானில் திரும்பிக்கொண்டிருந்தபோது,  வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கோமரங்கடவெல திரியாய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானதாகவும்; பொலிஸார் கூறினர்.

காயமடைந்தவர்கள் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பில் கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .